'காதலித்துவிட்டு, காதலன் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 11, 2019 11:00 PM

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் கண்முன்னே, காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman commit suicide due affair issue near villupuram

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணுவின் மகள் நிஷா. 22 வயதான இவர் செவிலியர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிணற்றுக்குள் கிடந்த நிஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மல்லாபுரத்தைச் சேர்ந்த 23 வயதான இளையராஜாவும், நிஷாவும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது தெரியவந்தது. இருவருடைய காதல் பற்றி பெற்றோர் , கிராம மக்கள் என அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. இதனால் தனிமையில் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இளையராஜாவின் தாய் அம்பிகா, கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு திரும்பி வந்தார். அவர், இளையராஜா-நிஷா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் நிஷாவை, இளையராஜா திருமணம் செய்து கொள்ள  முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் திங்கட்கிழமை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டு இரவு வீடு திரும்பிய நிஷாவை, இளையராஜா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நிஷாவின் வீட்டிற்கு பின்புறம் உள்ள கம்பு காட்டிற்கு அவசரமாக வரச் சொல்லியுள்ளார். அங்கு வந்த நிஷாவுடன் இளையராஜா பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது தாய் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து நிஷாவிடம் இளையராஜா கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள இளையராஜா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிஷா வேகமாக ஓடிச்சென்று அருகிலிருந்த 80 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது. போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VILLUPURAM #LOVE #LOVERS