'சுபஸ்ரீயின் உயிரை காவு வாங்கிய பேனர்'...'வெளியான சிசிடிவி காட்சிகள்'...'பதற வைக்கும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 13, 2019 04:17 PM

சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Subhasri accident shocking cctv video released

குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீயின் மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ செல்லும் போது அவர் மீது பேனர் விழுந்து, அவர் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

Tags : #AIADMK #CCTV #SUBHASRI RAVI #ILLEGAL BANNER