‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘ஆம்னி பேருந்தும் லாரியும்’.. ‘நேருக்கு நேர்’ மோதிக் கொண்ட பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 02, 2019 12:13 PM

விழுப்புரம் அருகே சரக்கு லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Driver died in omni bus lorry accident near Villupuram

கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற ஒரு லாரியை முந்த முயன்றுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் லாரியில் படுத்துக் கொண்டிருந்த கூடுதல் ஓட்டுநர் தர்மலிங்கம் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லாரியை ஓட்டி வந்த ராஜூ என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதில் ஆம்னி பேருந்தின் ஓட்டுநருக்கு கால்முறிவும், 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #VILLUPURAM #ROADACCIDENT #LORRY #OMNIBUS #HIGHWAY