‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 10, 2019 06:19 PM

சேலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Salem 1 dead 2 injured in two wheeler accident disturbing video

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரும் இவருடைய பேரன் அரவிந்தும் இன்று இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது அதிவேகத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அரவிந்த் மற்றும் விபத்தை ஏற்படுத்திய சக்திவேல் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சியைக் கொண்டு போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SALEM #TWOWHEELER #ACCIDENT #CCTV #VIDEO #DISTURBING