‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 10, 2019 11:17 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 dead 4 injured in panruti Lorry accident disturbing video

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை பெண்ணையாற்று அரசு மணல் குவாரியில் மணல் ஏற்றிய லாரி ஒன்று பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது. அப்போது அதிவேகத்தில் வந்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் எதிரில் வந்த கார் ஒன்றின் மீது அந்த லாரி மோதியுள்ளது. அதில் கார் லாரியில் மாட்டி சிக்கியபடியே இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த லாரி சிக்னலுக்காக காத்திருந்த இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியுள்ளது. இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து லாரி நின்றதும் பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த ஓட்டுநர் காமராஜ் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PANRUTI #LORRY #ACCIDENT #DISTURBING #CCTV #VIDEO #CAR #TWOWHEELER