‘தாறுமாறாக வந்த தனியார் பேருந்து’.. ‘முன் சக்கரத்தில் பைக்குடன் சிக்கிய நபர்’.. பதற வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 16, 2019 09:14 PM

கேரளாவில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Bus slams into parked bikes at Engapuzha bus stand

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எங்கபுழா பஸ் நிறுத்ததில் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அப்போது பேருந்து நிறுத்தத்திற்கு உள்ளே வந்த தனியார் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனங்களின் மீது மோதியது.

அப்போது இருசக்கர வாகனம் ஒன்றின் அருகில் இருந்த நபர் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்துக்கொண்டே செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாத்துருபூமி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #CCTV #KERALA #BUSACCIDENT #BIKES #INJURY