‘தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம்’... ‘இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'உறைய வைத்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 01, 2019 06:58 PM

வெளிநாட்டில் பணியாற்றுபவரின் மனைவியிடம், தவறாக நடக்க முயற்சித்த இளைஞர், செய்த காரியம் உறைய வைத்துள்ளது.

Youth arrested for pouring gasoline on woman in villupuram

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடியை சேர்ந்தவர் சின்னதுரையின், 25 வயதான மனைவி அருணாதேவி. திருமணமாகி 8 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சின்னதுரை சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, கடந்த பொங்கல் பண்டிகைக்கு அண்ணன் முறையான, அகரம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் சீர்வரிசை செய்தார். அவருடன் வந்த அதேப் பகுதியை சேர்ந்த 19 வயதான ஏழுமலை, அருணாதேவியின் மொபைல் எண்ணை வாங்கி, அடிக்கடி பேசி வந்தார்.

கடந்த வெள்ளிக்ழிமையன்று, பாக்கம்பாடி கிராமத்திற்கு வந்த ஏழுமலை, அருணாதேவியின் வீட்டில் மேல்மாடியில் தங்கியுள்ளார். பின், கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், ஏழுமலை, அருணாதேவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஏழுமலை, அருணாதேவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார்.  பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது, அவரைக் காப்பாற்றுவது போல் நாடகமாடியுள்ளார் ஏழுமலை.

அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 90 விழுக்காடு காயங்களுடன் பெண்ணையும், சிறிய அளவில் காயமடைந்த ஏழுமலையையும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே ஏழுமலையின் நாடகம் அம்பலமானது. இதனையடுத்து அவன் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags : #VILLUPURAM #COURASIN