"இனி மை கன்ட்ரி கைலாசா..." "தமிழ்நாட்டுக்கு 'நோ கம்மிங்...' 'நோ கனெக்ஷன்...'" "முடிஞ்சா கைலாசா வந்து என்னை மீட் பண்ணுங்க..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இனி தனக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். ஆனால் யார் கையிலும் சிக்காமல் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக 'கைலாசா' என்னும் நாட்டை உருவாக்கப்போவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு அடுத்தடுத்த வீடியோக்களில், கைலாசாவை அமைத்தே தீருவேன், இதுவரையில் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என பேசினார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய நித்தியானந்தா, ”கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இனி, எனக்கும் தமிழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.
மேலும், "தமிழக ஊடகத்தை பொறுத்தவரை நான் இறந்துவிட்ட மனிதனை போன்றவன். இனி நான் தமிழகத்திற்கு வரப்போவது இல்லை, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்க போகிறேன். நான் இறந்தபிறகு கர்நாடக ஆசிரமத்தில் உள்ள தியான பீடத்தில் தான் என் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துவிட்டேன். சொத்து முழுவதும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை நகரங்களில் உள்ள குரு பரம்பரைக்கு எழுதி வைத்து விட்டேன். என பேசியுள்ளார்.
