இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 02, 2020 03:33 PM

1. புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலகிலேயே அதிகபட்சமாக, இந்தியாவில்தான்(67,385) குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று கூறியுள்ளது.

Tamil News Important Headlines Read Here for January 2nd

2. அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்று இடித்து தரை மட்டமாக்கினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

3. மெக்ஸிகோவில் உள்ள சிறைச்சாலையில் கால்பந்து விளையாடுவது தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்தனர்.

4. குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளைக் காக்க, ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன.

5. NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

6. ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் புத்தாண்டு முதல் தேதியில் இருந்து 12 மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய  அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

7. ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட கவுன்சிலருக்கான போட்டியில் அதிமுக 107 இடங்களும், திமுக 128 இடங்களும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக 347 இடங்களிலும், திமுக 306 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

8. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா உள்ளிட்ட 311 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9. நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே மாநில அரசுகளின் கடமை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

10. சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் 78.20 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 71.98  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகளும், டீசல் விலை 12 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.