'சீடர் மரணம்!.. நித்தியானந்தா மாயம்... என்ன நடக்கிறது நித்தியின் ஆசிரமத்தில்?'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 16, 2020 12:23 PM

நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Disciple of Nithynandha died in a suspicious manner

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள யோகினி சர்வஜன பீடம் ஆசிரமத்தைச் சேர்ந்தவர், ஸ்ரீ நித்திய ஈஷ்வர பிரியானந்தா என்கிற சதீஷ் செல்வக்குமார். அவர் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார்.

இந்நிலையில், அவரது உடல் இந்திய-நேபாள எல்லையில் கண்டெடுக்கப்பட்டு வாரணாசியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நித்தியானந்தாவை இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸாரின் உதவியுடன் பெங்களூர் மற்றும் அஹமதாபாத் போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #NITHYANANDA #GUJARAT #DISCIPLE