VIDEO: பாய்ஸ் கொண்டாடுவது ‘லவ்வர்ஸ் டே’.. ‘ஆனா லெஜண்ட்..!’.. காதலர் தினத்தில் வைரலாகும் நித்யானந்தா வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்காதலர் தினம் குறித்து நித்யானந்தா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 14-ஆன இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காதலர்கள் தங்களது இணைக்கு மலர் கொடுத்தும், பரிசு கொடுத்தும் அன்பை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் காதல் பாடல்களை ஸ்டேட்ஸ்களாக பதிவிட்டு வருகிறனர். இவர்கள் ஒருபக்கம் காதலர் தினத்தை கொண்டாட, மற்றொரு பக்கம் ‘சிங்கிள்’ என சமூகவலைதளங்களில் பல பதிவுகளை ஆக்கிரமித்து வருகின்றான.
அதிலும் குறிப்பாக காதலர் தினத்தைப் பற்றி நித்யானந்தா பேசிய பழைய வீடியோ ஒன்றை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், ‘ஒவ்வொரு பக்கமாக ரோஜா பூவை தூக்கி எறியுங்கள், எங்கிருந்த பதில் வருகிறதோ, அவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். இதுதான் இன்றைய காதலர் தினம்’ என வாய்விட்டு சிரிக்கிறார். பின்னர் பாய்ஸ் கொண்டாடுவது லவ்வர்ஸ் டே, ஆனால் லெஜண்ட் (பெரியவர்கள்) கொண்டாடுவது சிவராத்திரி’ என நித்யானாந்தா பேசியுள்ளார். இந்த வீடியோவை இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
#காதலர்தினம் Happy #ValentinesDay2020 pic.twitter.com/qED8wcCEBJ
— Kannan Annamalai (@1987AKannan) February 14, 2020
