நிர்வாணமாக்கி 'நித்தியானந்தா' சீடர் கொலை..! காரில் கிடந்த சடலம்... தொடரும் கொலைகளால் 'பதற்றம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 30, 2020 10:56 AM

புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காரில்  நிர்வாண  நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nithyananda disciple murdered mysteriously and naked in car

புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல், நித்தியானந்தாவின் தீவிர பக்தரான இவர், வில்லியனூர் மற்றும் ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தாவின் பெயரில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய்கிழமை இரவு ஏம்பலத்தில் கடையை அடைத்துவிட்டு குருவி நத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க புறப்பட்டுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பியவர், திடீரென மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த பாகூர் போலீசார், குருவிநத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரவேலுவின் காருக்குள் அவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பணத்துடன் வந்த வஜ்ரவேலை, யாரோ மர்ம ஆசாமிகள் காருடன் கடத்திச்சென்று தலையை பாலித்தீன் கவரால் மூடி கொலை செய்து விட்டு, அவரது சடலத்தை நிர்வாணமாக்கி காரின் பின்பக்க இருக்கை அருகே படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைலாசா செல்வதாக கூறிச் சென்ற நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் நேபாள எல்லையில் அனாதை சடலமாக கிடந்த நிலையில், நித்தியானந்தாவின்  அதி தீவிர சீடர் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #NITHYANANDA #DICIPLE #MURDERED #NAKED #PUDUCHERRY