'கல்யாணமாகி 7 மாதம் தான்'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவால்'... 'கலங்கி நிற்கும் பெற்றோர்'... 'துக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி அருகே திருமணமான 7 மாதத்தில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் நாட்டான் மாது. இவருடைய மகன் மலர்மன்னன். 27 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று மலர்மன்னன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
