தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?... சென்னை வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 28, 2019 11:16 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

tamil nadu and puducherry will get light rain in 24 hours

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்குப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வெப்ப நிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியல் ஆகவும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியல் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RAIN #TAMILNADU #PUDUCHERRY