'நித்யானந்தாவைப் பிடிக்க புது திட்டம்?!'... 'இந்திய அரசு கோரிக்கை'... 'சர்வதேச போலீஸ் அதிரடி'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 22, 2020 05:56 PM

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

interpol issues blue corner notice to nithiyanandha

திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியாரான நித்யானந்தாவை, பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல் போன்ற பல்வேறு புகார்களில் பெங்களூர் மற்றும் குஜராத் காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆனால், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், 'கைலாசா' என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி, அதன் அதிபராக பதவியேற்று, அவ்வப்போது வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார், நித்யானந்தா.

அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல், நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்றால், "தலைமறைவாக இருக்கும் நபரைக் கண்டால் தகவல் அளிக்க வேண்டும்" என்பதே ஆகும்.

Tags : #NITHYANANDA #INTERPOL