‘இந்த மாஸ்க்க போடுங்க’.. ‘கொரோனா வைரஸ் கிட்டகூட வராது’.. அசத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 12, 2020 05:39 PM

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சத்தியமங்களைச் சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி புதிய மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

TN mechanical engineer find new mask for avoid Coronavirus

சத்தியமங்கலம் அடுத்த திருநகர் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் விக்னேஷ். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இதனால் கார்பன்ஸ் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக பல ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் வீட்டில் இருந்தபடியே செய்து வருகிறார்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி வெளியானது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாஸ்க் அணுயும்படி சீன அரசு அறிவுறுத்தியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக மக்கள் மாஸ்க் வாங்க குவிந்ததால் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அன்றாடம் பயன்படுத்தும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்து புதிய மாஸ்க் ஒன்றை விக்னேஷ் கண்டுபிடித்துள்ளார். பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி மாஸ்க் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது வைத்தால், அதன் துகள்கள் மாஸ்க்கில் 0.142 என்.எம் அளவுக்கு மட்டுமே இருக்கும். இதனால் இந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் 95 சதவீதம் வைரஸ் தொற்று குறையும் என research gate என்ற இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தவகை மாஸ்க் சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #MASK #MECHANICAL #ENGINEER #TAMILNADU