‘பொங்கல் பரிசு வாங்கப் போன பையன்’.. வரிசையில் நிக்கும்போது நடந்த சோகம்..! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 10, 2020 12:56 PM
பொங்கல் பரிசு வாங்க வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 1000 ரூபாய் பணத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் இது அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் 2 கோடியே 5 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 12ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும், விடுப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் 13ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தினமும் மக்கள் ரேஷன் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அனைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (19) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்கச் சென்றுள்ளார். அவர் சுமார் இரண்டரை மணி நேரமாக வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மயங்கி விழுந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் பொங்கல் பரிசு வாங்கச் சென்ற பள்ளி மாணவர், வரிசையில் நின்று மூச்சுத்திணறி உயிரிழந்தார்.