'விபத்து நடந்ததால் 'பாம்பிடம்' இருந்து எஸ்கேப் ஆன இளைஞர்'... நடு ரோட்டில் நடந்த பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 06, 2020 11:44 AM

இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது பைக்கில் இருந்து பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Theni: Bike Meets with Accident, Snake Pops Out

தேனி-பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை முன்பு வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆட்டோ ஒன்று அந்த வாலிபர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அந்த வாலிபர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபருக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க விபத்தில் விபத்தில் சிக்கி கீழே கிடந்த இருசக்கர வாகனத்தில் இருந்து நல்ல பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்தது. பாம்பு வெளியே வந்ததும் அதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். இதனிடையே கூட்டமாக மக்கள் ஓடியதை கண்ட பாம்பு மீண்டும் இருசக்கர வாகனத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டது.

இதையடுத்து 4 அடி இருந்த பாம்பை பொதுமக்கள் சிலர் லாவகமாக வெளியே இழுத்தனர். அப்போது பாம்பு அவர்களை பார்த்து சீறியது. இதனால் பதறிய பொதுமக்கள் கட்டையால் அதை அடித்தார்கள். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. அதனைத்தொடர்ந்து அந்த பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கிடையே விபத்தில் அந்த வாலிபர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், பாம்பிடம் இருந்தும் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ACCIDENT #SNAKE #CRASHED #THENI