பைக்கில் நண்பர்களுடன்... ஆலயத்திற்கு சென்ற அண்ணன், தம்பி... அதிவேகத்தில் லாரி மீது மோதியதில்... நொடியில் நடந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 02, 2020 05:52 PM

புத்தாண்டுக்கு நள்ளிரவில் ஆலய வழிபாடு செய்வதற்கு சென்ற அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Brothers Died IN Bike Lorry Road Accident In Nagercoil

நாகர்கோவில் புத்தேரி கீழகலுங்கடியை சேர்ந்தவர் அஜெய் (18). இவருடைய தம்பி சுனில் (17). புத்தாண்டையொட்டி ஆலய வழிபாடுக்காக, இவர்கள் 2 பேரும் கடந்த செவ்வாய்கிழமை அன்று நள்ளிரவில் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பினர். மேலும் இவர்களுடைய நண்பர்களான கண்ணன் (17) மற்றும் ராஜ்குமார் (18) ஆகியோருடன் ஒரே பைக்கில் 4 பேரும் சென்றனர். பின்னர் நள்ளிரவில், ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை அஜெய் ஓட்ட, மற்ற 3 பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

வடசேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர்களது பைக் தாறுமாறாக ஓடியது. அப்போது இவர்களது பைக்  தாறுமாறாக வந்ததைப் பார்த்து, எதிரே வந்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டார். எனினும், வேகமாக வந்த பைக், லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பைக் மொத்தமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் அண்ணன் அஜெய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தம்பி சுனில் மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், 3 பேரையும்  மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தம்பி சுனில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நண்பர்கள் கண்ணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் மகன்கள் இருவரும் உயிரிழந்தை அறிந்து, அவர்களது பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BIKE #BROTHERS