பாட்டி வீட்டுக்குச் சென்ற நண்பர்கள்... அதிவேகத்தில் வந்தப் பேருந்து மோதி... இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 01, 2020 12:01 AM

ரிஷிவந்தியம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 young men died in government bus accident in kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் மகன் தீனா (20). இவர் தனது நண்பரான லா.கூடலூரை சேர்ந்த பாலு மகன் அஜித் (20) என்பவருடன் இருசக்கர வாகனத்தில், பிரிவிடையாம்பட்டில் உள்ள தனது பாட்டியை பார்ப்பதற்காக சென்றார். ரி‌ஷிவந்தியம் -திருக்கோவிலூர் சாலையில் ரி‌ஷிவந்தியம் அடுத்த வெங்கலம் காலனி அருகே நண்பர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருக்கோவிலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீனா, அஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரி‌ஷிவந்தியம் போலீசார், விபத்தில் உயிரிழந்த தீனா, அஜித் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED #YOUTHS