‘நேருக்கு நேர் மோதிய லாரிகள்.. லாரி மீது மோதிய போதை ஆசாமிகள்’.. 5 பேரை பலிகொண்ட 2 விபத்துகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 01, 2020 04:05 PM

புத்தாண்டு நாளில், சோகத்தை ஏற்படுத்தும் வகையில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

lorry hits lorry and drunken bikers hist lorry 5 dead

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே உள்ள பட பச்சை பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான பாரில் பாரில் மது அருந்தி விட்டு, வெளியே வந்த வாகன ஓட்டிகள், சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியதில், கடும் விபத்து உண்டாகி சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.  இதில் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதே போல், ஒட்டன் சத்திரம் தங்கச்சியம்மாப்பட்டி அருகே 4 வழிச்சாலை பணி நிகழ்ந்து வரும் சாலையில் கன்னியாகுமரியில் ஐஸ்கீரிம் லோடு இறக்கிவிட்டு கோயம்புத்தூர் சென்ற லாரியும், கோயம்புத்தூரில் இருந்து நாகர் கோவில் சென்ற லாரியும் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளாகியதில், வாகனங்கள் நொறுங்கியதோடு, ஓட்டுநர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Tags : #ACCIDENT