‘70 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய லிஃப்ட்!’.. ‘புத்தாண்டு இரவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த சோகம்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 01, 2020 03:27 PM

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் புனித் அகர்வால். இவர், தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தபோது 70 அடி உயர லிஃப்டில் இருந்து மொத்த குடும்பமும் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

family of 6 dead after Elevator falling from 70 feet

தொழிலதிபர் புனித் அகர்வால் அவருடைய மகள் பாலக் அகர்வால்(27), மருமகன் பல்கேஷ் அகர்வால்(28), பேரன் நவ் (2), உறவினர்களான கௌரவ்(40), ஆர்யவீர்(11), நித்தி உள்ளிட்டோர் புனித் அகர்வாலின் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டுவரும் சொகுசு வீட்டின் மாடியில் இருந்து புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை பார்த்து ரசித்துவிட்டு, லிஃப்ட் வழியாக தரைதளத்துக்கு வர முயற்சித்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக 70 அடி உயரத்தில் இருந்த லிஃப்ட் அறுந்துபோய் தரையை நோக்கி வீச்சென வீழ்ந்தது. இதில் நித்தி மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

Tags : #ACCIDENT #MADHYAPRADESH #LIFT