நியூ இயர் பார்ட்டி முடிந்து... அதிவேகத்தில்... பைக்கில் வந்த கல்லூரி மாணவர்... நொடியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 01, 2020 12:18 PM

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து,  குடிபோதையில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவரின் பைக் சாலைத் தடுப்பில் மோதி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai College Student Injured After Bike Accident

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு, குடிபோதையில் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பள்ளிக்கரணை - வேளச்சேரி சாலையில் வந்தபோது திடீரென நிலைத் தடுமாறிய பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பெட்ரோல் கசிந்து, பைக் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பைக் கீழே விழுந்ததில் கல்லூரி மாணவர் நவீன் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் நவீனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #NEW #YEAR #CELEBRATION