வீட்டுக்கு திரும்பும் வழியில்... இஸ்ரோ சயின்டிஸ்ட் இன்ஜீனியருக்கு... நிமிஷத்தில் நிகழ்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 01, 2020 01:42 PM

சென்னை ஆவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ISRO Scientist Engineer Dies After Road Accident In Chennai

உத்திரமேரூர் கவிதண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (45). இவர் இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜீனியராக பணிபுரிந்து வந்துள்ளார். ராக்கெட்டுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வருவதால், அதன் தரம் குறித்து அந்தந்த தொழிற்சாலைகளுக்கு சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம்போல், ஆவடியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு  இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது இருசக்கர வாகனம் எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BIKE #ROAD