'குளிர்பானத்தில்' போதை மாத்திரை கலந்து கொடுத்து... சிறுமி என்றும் பாராமல்... '12ஆம்' வகுப்பு 'மாணவிக்கு' நேர்ந்த கொடுமை... தட்டித் தூக்கிய 'போலீசார்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 09, 2020 08:54 AM

குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

The person who conceived the student was arrested in pocso act

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அதற்கு மாணவி, தங்கள் வீட்டருகே வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் 11ஆம் வகுப்புவிடுமுறையின் போது தனக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தெரிவித்தார். மேலும் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து கீரனூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்தபோலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #PUDUKOTTAI #POCSO #ARREST #HARRASMENT