'நட்சத்திர' விடுதிக்கே 'விபூதி அடிக்க' பார்த்த 'தரகர்கள்'... தப்பியது வடபழனி 'அம்பிகா எம்பெயர்'... அமவ்ண்ட கேட்டா 'தலை சுத்திடும்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 03, 2020 06:59 PM

சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பெயர் நட்சத்திர விடுதியை விற்க முயற்சித்த 3 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 brokers arrested for trying to sell Ambika Empire star hotel

சென்னை வடபழனியில் அமைந்துள்ள அம்பிகா எம்பெயர் நட்சத்திர விடுதியை விற்கப் போவதாக கூறி மூன்று பேர் கேரள கட்டுமான நிறுவனம் ஒன்றை அணுகியுள்ளனர்.  அங்கு 3 இடைத்தரகர்களும் அறை வாடகை எடுத்து விலை பேசியுள்ளனர்.

நட்சத்திர விடுதியின் விலை 165 கோடி என கேரள நிறுவன மேலாளரிடம் பேரம் பேசியுள்ளனர். இந்நிலையில் கேரளா மேலாளர் விடுதியை சுற்றி பார்க்கும் போது சந்தேகம் அடைந்த நட்சத்திர விடுதி மேலாளர் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளார்.

அப்போது கேரள நிறுவன மேலாளர் நட்சத்திர விடுதி விற்பது தொடர்பாக பேசியதால் அதிர்ச்சியானார். இதனையடுத்து போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார்  விசாரணையிக்குப் பிறகு 3 இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன் என தெரிய வந்துள்ளது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : #AMBIKA EMPIRE #BROKERS #ARREST