'மகள்' குளிக்கும் போது ஏதோ 'சப்தம்'... 'செல்ஃபோனுடன்' ஓடிய 'மர்மநபர்'... 'மடக்கிப் பிடித்து' போலீசில் ஒப்படைத்த 'தாய்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 26, 2020 07:13 AM

சென்னை அயனாவரத்தில் பெண் குளிக்கும் போது செல்போனில் படம் எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

chennai auto driver arrested for took women bathing video

சென்னை அயனாவரத்தில் வசித்து வரும் வினோத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அயனாவரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில்  அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்து வருவதாகவும், கடந்த 5-ம் தேதி வீட்டில் உள்ள பாத்ரூமில், மூத்த மகள் குளித்துக் கொண்டிருக்கும்போது, பாத்ரூம் ஓட்டை வழியாக யாரோ வீடியோ படம் எடுப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சென்று பார்க்கும் போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் என்பவர் செல்ஃபோனில் படம் பிடித்தது தெரிய வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவருடன் சண்டையிட்டு செல்போனை பறித்து வைத்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் அயனாவரம் அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தியதில், புகார் உண்மை என தெரியவந்துள்ளது. வினோத் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினர் வினோத்தின் செல்ஃபோனை ஆய்வு செய்ததில் பல ஆபாச வீடியோக்களும் குளியலறை வீடியோக்களும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து வினோத்தை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #CHENNAI #AYANAVARAM #ARREST #AUTO DRIVER