"சார், 500, 200 மட்டும் தான் வாங்குவார்..." "2000 ரூபாய் வச்சிருக்கிறவங்க எல்லாம் வரிசைல நிக்காதிங்க..." ஒரு 'பிரின்சிபிலுடன்' 'லஞ்சம்' வாங்கிய 'சப் கலெக்டர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 02, 2020 12:28 PM

மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் 500, 200 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் வாங்கிய துணை கலெக்டரை போலீசார் கைது செய்தனர்.

Deputy Collector got bribe Rs500, 200 notes Only-Police arrest

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரைக் கட்டணம் தனித்துணை கலெக்டராக தினகரன் பணியாற்றி வந்தார். இவர் போளூரை சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமாரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

இதையடுத்து தினகரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 78 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பணம் அனைத்தும் அவர் கடைசி ஒரு மாதத்தில் லஞ்சமாக வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் அதை நம்பிய தினகரன் லஞ்சம் வாங்கியவர்களிடம் 500, 200, 100 ரூபாய் நோட்டுகளையே லஞ்சமாக தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். இந்த பணத்தை தனது வீட்டில் உள்ள டிரங்க் பெட்டியில் பதுக்கி வைத்திருந்தார்.

Tags : #DEPUTY COLLECTOR #ARREST #VELLORE #BRIBE