'மனைவி' ஊரில் இல்லாத நேரத்தில்... 17 வயது பக்கத்து வீட்டு பெண்ணை 'கடத்தி' சென்ற கணவன்.... 'போக்சோ' சட்டத்தில் கைது...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 14, 2020 12:05 AM

திருப்பூரில் 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

A man who abducted and raped a 17-year-old girl

திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் கலாதரன் என்பவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தன. இதனால் கலாதரனின் மனைவி கேரளாவில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

இந்நிலையில் தனியாக திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த கலாதரன், வீட்டின் அருகில் வசித்து வந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் கலாதரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கலாதரன் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கலாதரனை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #THIRUPUR #POCSO #ARREST