‘வீட்ல தனியா இருந்தா.. பெத்த பொண்ணுனு கூட பாக்காம’.. ப்ளஸ் டூ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அண்ணா நகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடையை ப்ளஸ் டூ படிக்கும் மகளுடன் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

பழனி என்கிற தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து 3 மகள்களுடன் வாழும் அப்பெண்ணின் முதல் மகள் கல்லூரியிலும் 2வது மகள் ப்ளஸ் டூவும் பயிலும் நிலையில், 3வது மகள் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த தனது ப்ளஸ் டூ பயிலும் 2வது மகளிடம் வந்து தனது கணவர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், இதுபற்றி கேட்டதற்கு தன்னையும் அநாகரிகமாக பேசியதாகவும் கூறி தனது கணவர் பழனி மீது அப்பெண் புகார் அளித்துள்ளார்.
அப்பெண் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, சம்மந்தப்பட்ட ப்ளஸ் டூ மாணவியை விசாரித்து இதனை உறுதி செய்ததை அடுத்து, அண்ணாநகர் கிழக்கு வ.உ.சி நகரைச் சேர்ந்த அப்பெண்ணின் தந்தை பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி பேசிய போலீஸார், பழனி குடிபோதையில் தன் பெற்ற மகளிடமே தவறாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அதன் பிறகு மன்னிப்பு கேட்ட பழனியை அவரது மனைவியும் மகளும் மன்னிக்கவில்லை என்றும் எனவே அவரை சிறையில் அடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
