‘4 வயது சிறுமிக்கு’... ‘பக்கத்து வீட்டு தாத்தாவால்’... 'சென்னையில் நடந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 27, 2020 04:43 PM

சென்னையில் 4 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டு முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

Man Arrested in Pocso Act Due to harrassed to neighbour girl

சென்னையை அடுத்த போரூர் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ஜெகன்நாதராவ். இவர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள 4 வயது சிறுமிக்கு, தாத்தா வயது உடைய ஜெகன்நாதராவ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூற அவர்கள் அதிர்ந்து போயினர்.

பின்னர் பாலியல் தொந்தரவு தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பூவிருந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முதியவர் ஜெகன்நாதராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #CHENNAICHILDABUSE #OLD MAN #POCSO