இவர் மேல எங்களுக்கு 'சந்தேகம்' இருந்துச்சு... நாங்க கண்காணிச்சிட்டே இருந்தோம்... 'சிறார்' ஆபாசப்பட விவகாரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 16, 2020 06:13 PM

குழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து பார்வேர்டு செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Child porn downloader arrested issue was in doubt

தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பாலசுப்பிரமணியன். மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. புளியங்குடி ஆர்எஸ்கேபி தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர், இணையதளங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் ஏராளமானோருக்கு அனுப்பி வந்துள்ளார்.  இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து போலீசார் கண்காணித்த போது பாலசுப்பிரமணியன், குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அனுப்பியது தெரிய வந்தது.இதையடுத்து புளியங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags : #ARREST #DOWNLOADER