அசுர வேகத்தில் வந்த டேங்கர் லாரி... அடுத்தடுத்து 15 வாகனங்கள் மீது மோதி கோர விபத்து... உருக்குலைந்து போன வாகனங்கள்... 32 பேர் பலி...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 09, 2020 08:40 AM

சிரியா நாட்டில் பிரேக் செயலிழந்ததால் ஒரு டேங்கர் லாரி, 2 பேருந்துகள் உட்பட 15 வாகனங்களின் மீது மோதிய கோர விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

Tanker truck crashes into Syria, killing 32 people

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரை ஹோம்ஸ் மாகாணத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வழக்கம்போல் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று பிரேக் செயலிழந்ததால் தறிகெட்டு ஓடியது. இந்நிலையில் அசுர வேகத்தில் வந்த அந்த டேங்கர் லாரி எதிரே வந்த 2 பேருந்துகள் உட்பட அடுத்தடுத்து 15 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இதில் ஒரு பேருந்து 2 துண்டுகளாக உடைந்து சிதறியது. இந்த விபத்தில் 32 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SYRIA #TANKER TRUCK #CRASHES #32 KILLED