'பள்ளி மாணவி' என்றும் பாராமல்... 'மிரட்டி' பணிய வைத்த 'தலைமை ஆசிரியர்'... சித்ரவதை தாங்காமல் மாணவி எடுத்த 'விபரீத முடிவு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 14, 2020 12:57 PM

பள்ளி மாணவியை தலைமை ஆசிரியர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Headmaster who intimidates and sexual harassment school student

குஜராத் மாநிலம் சோட்டிலா நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்த 16 வயதான மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது விடுதி அறையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு மயக்க நிலையில் கிடந்தார்.  இதைக்கண்டு பதறிய அவரது தோழிகள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் அறிந்த மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை மாணவி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் 2 முறை தலைமை ஆசிரியர் 'பதுக் பாட்டில் ' தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அழுது கொண்டே கூறியுள்ளார்.  கடந்த அக்டோபர் 22ம் தேதி மாணவியை பள்ளி வார்டன் மூலம் அழைத்து வரச் சொன்ன தலைமை ஆசிரியர் பதுக்பாட்டில், வார்டனை அனுப்பிவிட்டு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். நடந்ததை வெளியே கூறினால் ஆபாச புகைப்படங்களை வெளியே அம்பலப்படுத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதேபோல் கடந்த 10ம் தேதியும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மனம் வெதும்பிய மாணவி தனது இடது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதையடுத்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தலைமை ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு போலீசார் பதுக் பாட்டீலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags : #GUJARAT #HEADMASTER #SCHOOL STUDENT #HARRASMENT