'டெல்லி' வன்முறை.... பலி எண்ணிக்கை '5 ஆக' உயர்வு... போலீசாரை நோக்கி 'துப்பாக்கியால்' சுட்டவர் யார்? 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 25, 2020 12:27 PM

டெல்லியில் வன்முறை வெடித்த பகுதியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi man arrested for violently shooting into sky

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியில் ஷாகீன்பாக்கில் 71 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில்,  நேற்று மாலை டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

அப்பகுதியில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வாலிபர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் போலீசாரை சுட்டு மிரட்டி விரட்டினார். மேலும் வானத்தை நோக்கி 5 ரவுண்ட்டுகள் சுட்டார். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவியது. இவர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இந்நிலையில் ஷாரூக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 33 வயது கொண்ட தாடி வைத்து காணப்படும் இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கியுடன் வந்து போலீசாரை மிரட்டிய நபரின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #DELHI #PROTEST #MAN OPEN FIRE #ARREST #DELHI POLICE