‘நட்பாக பழகிய மாணவியிடம்’... ‘கல்லூரி மாணவர் செய்த கொடூரம்’... '6 நாட்களாக நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 11, 2020 08:54 PM

கும்பகோணம் அருகே 10 வகுப்பு மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tenth Standard Student was Assault by College Student

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரிடம், விநாயகர் தெருவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் நட்பாக பழகியுள்ளார். மாணவி பழகியதை பயன்படுத்திக் கொண்ட கல்லூரி மாணவர், தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து தனது வீட்டில் ஆறு நாட்களாக மாணவியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி மாணவரின் வீட்டில் இருந்து மாணவியை மீட்டனர். தனது பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENT #SCHOOLSTUDENT #KUMBAKONAM #POCSO