‘ஆட்டோ ஓட்டுநரால்’... ‘செய்வதறியாது தவித்த மாணவி’... நடந்ததைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்... பொள்ளாச்சியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 16, 2020 04:44 PM

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Auto Driver arrested in POCSO for School Girl Pregnant

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான யாசின். இவர் அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவி, ஆட்டோ ஓட்டுநர் யாசினிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யாசின், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதனால், பெற்றோரிடமும் சொல்ல முடியாமலும், வெளியிலும் சொல்ல முடியாமலும் மாணவி செய்வதறியாது தவித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியே தனியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பெற்றோருக்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். அங்கு சென்ற பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது, நடந்ததை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் யாசின் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். பொள்ளாச்சி ஆட்டோ நிறுத்தத்தில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #SEXUALABUSE #POCSO #POLLACHI #AUTO DRIVER