“வீட்டில் வசித்த 8 வயது சிறுமி”.. “58 வயது செக்கிங் இன்ஸ்பெக்டரால் நேர்ந்த கொடுமை!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 21, 2020 04:00 PM

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 58 வயதான நபர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

man abuses 8 year old minor girl and arrested under POCSO

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடியைச் சேர்ந்தவர் 58 வயதான குருசாமி. கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு ஒரு தம்பதியனர் வசித்து வருகின்றனர்.

அத்தம்பதியரின் 8 வயது மகளுகு குருசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே வந்து சிறுமி, தனது தாய், தந்தையரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர் குருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுமட்டுமன்றி சமீபகாலமாக நாகர்கோவில் பகுதிகளில் இதுபோன்று தொடர்ந்து சிறார் வதை சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

Tags : #POCSO