'செல்போனில்' ஆசையைத் தூண்டும் விதமாக பேசிய 'பெண்'... 'பணத்தை' பறிகொடுத்த 300க்கும் மேற்பட்ட 'இளைஞர்கள்'... கடைசியில் தெரியவந்த 'அதிர்ச்சி ட்விஸ்ட்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 24, 2020 02:16 PM

சென்னையில் பாலியல் ஆசையை தூண்டும் வகையில் பெண் குரலில் பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

man arrested for allegedly defrauding 350 people

சென்னையில் மயிலாப்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலர் மீது, பிரியா என்ற பெயரில் பெண் ஒருவர் இ.மெயிலில் புகார் அளித்து வந்தார். அதில் இளைஞர்களின் பெயரை குறிப்பிட்டு ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்பொழுதுதான் தெரிந்தது, புகார் அளித்து வந்தது பெண் அல்ல ஆண் என்று.

இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புகார் அளித்து வந்தவர் பெயர் வள்ளல் ராஜ்குமார் என்பதும், நெல்லை மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமாரை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பணம் பறிக்கும் நோக்கத்தில் 350-க்கும் மேற்பட்ட இளைஞர்களை இதுபோன்று பெண் குரலில் பேசி அவர் ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வள்ளல் ராஜ்குமார் போனில் பேசும் போது, தனது மிமிக்கிரி திறமையால் மயக்கும் பெண் குரலில் பாலியல் ஆசையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். தனக்கு பணக்கஷ்டம் இருப்பது போன்றும் தனது பே.டி.எம்.-ல் பணத்தை பறிமாற்றம் செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதில் மயங்கிய இளைஞர்கள் பலர் தங்கள் பணத்தை  பறிமாற்றம் செய்து ஏமாந்துள்ளனர். மோசடி ஆசாமியான வள்ளல் ராஜ்குமார் மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார்  தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வள்ளல் ராஜ்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #MYLAPORE #MIMICRY YOUTH #FRAUD #ARREST