‘கழுத்தை நெரித்துக் கொலை!’.. ‘சாணிப் பவுடர் விஷம் ஊற்றி’.. காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அரசு கலைக்கல்லூரியல் இறுதியாண்டு பயின்று வந்தவர் நந்தினி. இவரும் கணபதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்த நிலையில் நந்தினியின் தாய் ராமாத்தாள் சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரின் திருமணத்துக்கும் சம்மதித்ததோடு கல்லூரி படிப்பு முடிந்த பின்னர்தான் திருமணம் என்றும் கூறியிருந்துள்ளார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தினேஷின் நடவடிக்கையில் சந்தேகம் உண்டானதால் அவருடன் பேச நந்தினி மறுத்ததுடன் திருமணம் செய்யவும் மறுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று மாலை வீட்டில், நந்தினியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் நந்தினியின் வீடு புகுந்த தினேஷ், ஆத்திரத்தில் மாணவி நந்தினியை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்துடன் அவரது வாயில் சாணிப்பவுடர் விஷத்தையும் ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.
பின்னர் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய நந்தினியின் பெற்றோர் நந்தினியின் கோலத்தைப் பார்த்து பதற்றமானதுடன் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, தினேஷோ, தனது பாட்டி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை, கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
