‘மனைவியை’ காணவில்லை... புகார் கொடுக்க வந்து ‘குடும்பத்தோடு’ வசமாக ‘சிக்கிய’ நபர்... ‘அடுத்து’ மாட்டிய காதலன்... ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 01, 2020 08:10 PM

கோவையில் மனைவியை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்த நபர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Coimbatore Husband Lover Arrested In 16 YO Girl Missing Case

கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஷார். இவர் தனது மனைவியை காணவில்லை என வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீசார், அவருடைய மனைவி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற இளைஞரோடு சென்றதைக் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து ரஞ்சித்குமாரிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்டபோது, அவர் 16 வயதேயான சிறுமி என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிஷார் முகமது, ரஞ்சித் குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் முகமது நிஷாரின் பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #COIMBATORE #MINOR #GIRL #HUSBAND #LOVER