'விடாமல் துரத்திய யானை'... 'தப்பி ஓட முயற்சித்தும்'... 'நிகழ்ந்தேறிய பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 05, 2020 12:45 PM

கோவையில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 year old farmer dies after elephant hit in Coimbatore

கோவை தேவராயபுரம் வெள்ளருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. 45 வயது விவசாயியான இவர், இன்று அதிகாலை தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சாமனூருக்கு சென்றார். சாமனூர் அருகே வந்தபோது அங்கு வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென வழிமறித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த விவசாயி கிட்டுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயி கிட்டுசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #FARMER #COIMBATORE #ELEPHANT