'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் முகுந்தன். இவரது மனைவி திவ்யாவின் தம்பி சண்முகநாதன் (வயது 25). இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் சண்முகநாதனுக்கு அவரது பெற்றோர் கார் வாங்கிக் கொடுக்க மறுத்ததால் கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் என்பவர், தமிழிசை சௌந்தரராஜனுடைய மருமகளின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
