'வெளிய சொன்னா 'பரீட்சை மார்க்'ல கைவச்சுடுவேன்!'... சுற்றுலா அழைத்து சென்று... மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!... பிடிப்பட்டது எப்படி?... பகீர் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுற்றுலா அழைத்து சென்று மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம் தாலுக்காவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில், 136 மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் 57 வயதான நாராயண பிரசாத், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி, மாணவிகள் சிலரை பள்ளியின் தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை ஆகிய பகுதிகளுக்கு கல்வி களப்பணி என்ற பெயரில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதை வெளியே சொன்னால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்றும் மாணவிகளை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, யாரிடமும் சொல்ல முடியாமல் மாணவிகள் தவித்து வந்த நிலையில், சில மாணவிகள் நாராயண பிரசாத்தின் அத்துமீறல் குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர் தலைமை ஆசிரியர் இளவரசனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
