‘வழக்கமா ஆட்டுக்கு பண்ற மாதிரி’.. ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி...!’.. மிரள வைத்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆட்டை மறைத்து வைக்க உதவாத காவலாளியை கொலை செய்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பாடிபில்டிங் கம்பெனியில் கடந்த 2018ம் ஆண்டு காவலாளி நித்யானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்கள் மற்றும் முகம் ‘பேக்கிங் டேப்’ மூலம் சுற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றிவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாகமலைபுதுக்கோட்டை அருகே சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவருக்கு சொந்தனாமன் 3 ஆடுகள், முத்துமாரி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் திருடு போனதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளின் வாயை பேக்கிங் டேப்பால் சுற்றப்பட்டு ஆட்டோவில் ஒருவர் எடுத்துச் செல்வதை போலீசார் பார்த்துள்ளனர்.
உடனே அவரை மடக்கி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் அப்பகுதியில் ஆடுகளை குறிவைத்து திருடும் ராக்கெட் ஜெயபால் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காவலாளி நித்யானந்ததை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது கூட்டாளி அப்பள பாண்டியன் என்பவருடன் சேர்ந்து ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், திருடிய ஆடுகளை சம்பந்தப்பட்ட பஸ் பாடிபில்டிங் கம்பெனியில் மறைத்து வைக்க காவலாளி நித்யானந்தா மறுத்ததால், தங்களது வழக்கமான பாணியில் பேக்கிங் டேப் ஒட்டி ஆட்டை அறுப்பது போன்று கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராக்கெட் ஜெயபால் மற்றும் அப்பளப் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.