VIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிகரெட் பிடித்ததை கண்டித்த முதியவரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திருக்கனூர் கடை வீதியில் திருஞானம் என்பவர் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடை அருகே இளைஞர்கள் சிலர் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கடைக்கு அருகில் சிகரெட் பிடிக்கக்கூடாது என இளைஞர்களிடம் திருஞானம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திருஞானத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞர் திருஞானத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். திருஞானத்தின் உடன் இருந்தவர் இதனை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் அவரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து திருஞானம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடைக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
