‘மச்சா ஆன்சர் பேப்பரை காட்டுடா’!.. ‘மறுத்த நன்றாக படிக்கும் மாணவன்’.. கோபத்தில் கத்தியால் குத்த ஓடிய கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 11, 2020 06:05 PM

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்போது விடைத்தாளை காண்பிக்காத மாணவனை சகமாணவன் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School boy threatened with knife for refusing to share answer sheet

அகமதாபாத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணாநகர் எக்ஸாம் சென்ட்ரில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் அருகில் உள்ள நன்றாக படிக்கும் மாணவரிடம் விடைத்தாளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். உடனே அந்த மாணவர் தேர்வு கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து தேர்வு கண்காணிப்பாளர் காப்பி அடிக்க முயன்ற மாணவரை எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தேர்வு முடிந்து கோயிலுக்கு அருகே நின்றுகொண்டிருந்த புகார் கொடுத்த மாணவரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். உடனே அந்த மாணவர் அங்கிருந்து ஓடி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது தந்தை தாக்க முயன்ற மாணவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தேர்வில் விடைத்தாளை காட்டாத மாணவரை சக மாணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #EXAM #SCHOOLSTUDENT #AHMEDABAD