‘குழந்தையுடன் விளையாடிய அப்பா’.. ‘திடீரென எழும்பிய ராட்சத அலை’.. பதற வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 05, 2019 01:42 PM

இங்கிலாந்து நாட்டில் ராட்ச அலையில் சிக்கி தந்தையும், அவரது குழந்தையும் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளிகியுள்ளது.

VIDEO: Man and child almost swept away by sea wave

இங்கிலாந்து நாட்டில் ஐல் ஆஃப் வெயிட் என்ற தீவில் உள்ள கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சிலர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் அப்பாவும், குழந்தையும் இழுத்து செல்லப்பட்டனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க ஓடினர்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அந்த நபர் அருகில் உடைந்து கிடந்த இருக்கையை பிடித்துக்கொண்டு, தன்னையும் குழந்தையும் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHILD #ENGLAND #SEAWAVE #FATHER