'தலையில் தோட்டா'... 'ஏழு கி.மீ பயணம்'... 'சிறுவன் கைது'... 'திக் திக் நிமிடங்கள்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாதுப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும் 7 கி.மீ தூரம் வரை, ஒரு பெண் கார் ஓட்டியது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வரும் பெண், சுமீத் கௌர். அவர் தனது தாயுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர் தலையில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவருடன் இருந்த அவர் தாய்க்கும் லேசாக அடிபட்டது. பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், சுமீத் கௌர் 7 கி.மீ தூரம், காவல் நிலையத்துக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது, சுமீத் கௌரின் அண்ணன் மகன் எனத் தெரிய வந்துள்ளது. சுமீத் கௌருக்கும், அவர் அண்ணனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்துள்ளது. எனவே, தனது மகனை வைத்து சுமீத் கௌரைக் கொல்ல அண்ணன் முயன்றுள்ளார்.
இது குறித்து பேசுகையில், "என் தந்தையின் மரணத்திற்குப் பின், எனக்கும் என் தாய்க்கும் 16 ஏக்கர் நிலம் கிடைத்தது. அதை எங்களிடம் இருந்து பறித்துக் கொள்வதே என் அண்ணனின் குறிக்கோள். அதனால் தான் எங்களைக் கொல்ல முயற்சி செய்து வருகிறார்" என்று சுமீத் கௌர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சுமீத் கௌரின் அண்ணன் மீதும், அவரது மகன் மீதும், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட சிறுவன், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
