‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 22, 2020 08:18 AM

சத்தீஸ்கரில் சந்தேகம் காரணமாக இளைஞர் ஒருவர் மனைவியையும், ஆண் ஒருவரையும் எரித்துக் கொலை செய்துள்ளார்.

Chhattisgarh Man Ties Up Burns Wife Lover Alive Over Affair Issue

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரைச் சேர்ந்தவர் ரவி ஷர்மா. இவர் தன் மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை மாத குழந்தை நிஷாவுடன் தால்புரி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மஞ்சுவின் தாய் வீட்டிற்கு ஒரு ஃபோன்கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், “உங்கள் மகள் மஞ்சுவும், மருமகன் ரவியும்  தீயில் எரிந்துகொண்டிருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றுங்கள்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு பதறிப்போன அவர்கள் உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து காலை 5.30 மணியளவில் போலீசார் ரவியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது. சோதனையில் வீட்டின் பின்புறம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், வீட்டிற்கு உள்ளே மஞ்சுவும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இருவருடைய கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் முழுவதும் டேப் சுற்றப்பட்டு இருந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அவர்கள் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் அங்கு குழந்தை நிஷாவும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் எரிந்த நிலையில் இருந்த பெண் மஞ்சுதான் என்பதை உறுதி செய்த போலீசார், அங்கிருந்த ஆண் சடலம் ரவியுடையது அல்ல என்பதையும் கண்டறிந்துள்ளனர். பின்னர் வீடு முழுவதும் மீண்டும் சோதனை செய்ததில், கதவு ஒன்றின் பின்புறம் குறிப்பு ஒன்று எழுதப்பட்டிருந்துள்ளது. அதில், “மஞ்சுவிற்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்தது. அவளால்தான் என் தம்பி தற்கொலை செய்துகொண்டான். அதனால்தான் அவளைக் கொலை செய்தேன். மீதமுள்ளவர்களையும் கொலை செய்வேன்” என எழுதப்பட்டிருந்துள்ளது.

அதன்மூலம் ரவி உயிரிழக்கவில்லை என உறுதி செய்த போலீசார், மஞ்சுவின் வீட்டிற்கு போன் செய்த நபரைப் பற்றி விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த போன் கால் அருகிலுள்ள துர்க் ரயில் நிலையத்திலிருந்து வந்ததும், அப்போது ரவி அங்கிருந்ததும் தெரியவந்துள்ளது. அதை வைத்து ரவியைத் தேடிய போலீசார் ரூர்கெலா ரயில் நிலையத்தில் இருந்த அவரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “மஞ்சுவின் முதல் கணவர் அவரைக் கைவிட்டு மஞ்சுவின் தங்கையை திருமணம் செய்துகொண்டதால், அவர் ரவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மஞ்சு மீதான சந்தேகத்தில் ரவி அவரைக் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் தடயத்தை அழிப்பதற்காக அவர்கள் முகத்தில் டேப்பை சுற்றி எரிக்க முயன்றுள்ளார். அங்கு சடலமாக இருந்த ஆண் யார், அவரை ஏன் ரவி கொலை செய்தார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என விசாரித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #CRIME #MURDER #CHHATTISGARH #HUSBAND #WIFE #BABY #AFFAIR #BROTHER